Thupparithal
செய்திகள்

கோவில்பட்டி கண் தான இயக்கம் மற்றும் கே.ஆர்.கல்வி நிறுவனங்கள் இணைந்து கண் தான விழிப்புணர்வு பேரணி..!

இருவார தேசியக் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வின் ஒரு அங்கமாக தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனை, கோவில்பட்டி கண் தான இயக்கம் மற்றும் கே.ஆர்.கல்வி நிறுவனங்கள் ஆகியவை இணைந்து கண் தான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். கோவில்பட்டி, பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பயணியர் மாளிகையில் இருந்து துவங்கிய பேரணியை கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் சாய்ராம் டீன் வி பரமசிவம் தலைமையேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பயணியர் விடுதி முன்பு தொடங்கிய பேரணி மெயின் ரோடு, மார்க்கெட் சாலை , புது ரோடு வழியாக கோவில்பட்டி செயின்ட் எஸ் ஐ ஜோசப் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவுற்றது. நிகழ்ச்சியின் நிறைவில் மருத்துவர்கள் கண் தானம் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

இதில் கே.ஆர்.கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உப்பு தொழிலாளர் சங்கம் (சிஐடியு) கண்டனம்

Admin

வ. உ. சிதம்பரனாரின் 152-வது பிறந்த நாள்; வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது..

Admin

தூத்துக்குடி அருகே, மின் சிக்கன விழிப்புணர்வு மற்றும் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.

Admin

Leave a Comment

error: Content is protected !!