Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உப்பு தொழிலாளர் சங்கம் (சிஐடியு) கண்டனம்

இந்திய தொழிற் சங்க மையம் (சிஐடியு) உப்பாள தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.சங்கரன் அவர் அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ராஜபாண்டி நகர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையில் இன்று உப்பள தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இதில், உப்பள தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கேட்டுள்ளார், மழைக்கால நிவாரணம் அனைவருக்கும் கிடைத்திடவும், மருத்துவ முகாம் நடத்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஆனால் உப்பள தொழிலாளர்களுக்காக போராட்டங்கள் நடத்தக்கூடிய பல்வேறு அமைப்புகள் உள்ளன. இதில் பிரதானமாக உப்பள தொழிலாளர்களுக்காக பல்வேறு போராட்டங்களை உப்பு தொழிலாளர் சங்கம் (சிஐடியு) தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்நிலையில், இச்சங்கங்களுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல் ஒரே ஒரு குறிப்பிட்ட அமைப்பை சார்ந்தவரையும், தொழிலாளர்களையும் வைத்து மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த உப்பள தொழிலாளர்களுக்கு எவ்வித முறையான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

ஆகவே மாவட்ட ஆட்சியரின் இச்செயலுக்கு உப்பு தொழிலாளர் சங்கம் (சிஐடியு) கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. வரக்கூடிய காலங்களில் உப்பள தொழிலாளர்களை மாவட்ட ஆட்சியர் சந்திக்க வேண்டும் எனில் அனைத்து தொழிற்சங்கங்களுக்கு முறையான தகவல் தெரிவித்து கருத்துகளை கேட்க வேண்டும் என உப்புத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) மாவட்ட செயலாளர் கே.சங்கரன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் மு. மணிகண்டன்

Related posts

நாசரேத் ஆலயத்தில் திருமண்டல பிரதமப் பேராயரின் ஆணையாளருக்கு வரவேற்பு!

Admin

வில்ஹெல்ம் ரான்ட்ஜென் சர்வதேச கதிரியக்கவியல் தினம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது.

Admin

போதை பொருள் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி; பள்ளி மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Admin

Leave a Comment

error: Content is protected !!