Thupparithal
அரசியல்

தூத்துக்குடி, மாநகர பாஜக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

தூத்துக்குடி, திமுக நிர்வாகி வி. வினோத் தலைமையில், பாஜக கட்சி நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்தனர்.

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள திமுக வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில்,100க்கும் மேற்பட்ட பாஜகவினர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.

பாஜக வடக்கு மண்டல பொருளாளர் சிவராம், பொதுசெயலாளர் காமராஜ், துணைத்தலைவர் நவனீதன், செயலாளர் வேல்முருகன், மகளிர் அணி தலைவி தனலெஷ்மி, திரேஸ்புரம் கிளைதலைவர் ரவிந்திரன், பூபால்ராயர்புரம் கிளைதலைவர் கிளாஸ்டன், பிறமொழி பிரிவு மாவட்ட செயலாளர் பரத், முத்துகிருஷ்ணராஜபுரம் கிளைதலைவர் முருகன், கந்தசாமிபுரம் கிளைதலைவர் கிருஷ்ணகுமார், சக்திவிநாயகபுரம் கிளைதலைவர் பொன்ராம், எழில்நகர் கிளைதலைவர் கந்தசாமி, சுந்தரவேல்புரம் கிளைதலைவர் நாகராஜ், அம்பேத்கர் நகர் கிளைதலைவர் நேரு, ஜயர்விளை கிளைதலைவர் கணேசன் மற்றும் 100க்கு மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

பின்னர், அமைச்சர் கீதாஜீவன் பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், பகுதி செயலாளர் ஜெயக்குமார் மற்றும் அல்பர்ட், திமுக கட்சியினர் பலர் உடனிருந்தனர்..

செய்தியாளர் மு.மணிகண்டன்

Related posts

அண்ணாமலையை பார்த்து நாங்கள் தான் சிரிக்க வேண்டி உள்ளது-முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறிய காரணம் என்ன?…

Admin

திமுக ஆட்சிக்கு வந்த பின் தான் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது- வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மேயர் ஜெகனிடம் பொது மக்கள் கூறிய அந்த வார்த்தை……!

Admin

ஆறுமுகநேரியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும்- பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

Admin

Leave a Comment

error: Content is protected !!