சென்னை சேப்பாக்கத்தின் சட்ட மன்ற உறுப்பினரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நாளை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், இன்று தூத்துக்குடியில் உள்ள ஆட்டோக்களில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளின் வாழ்த்து செய்தி அடங்கிய ஸ்டிக்கர்களை 200 க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் ஒட்டி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஸ்டிக்கரில் இனிய பிறந்தநாள் காணும் ஆருயிர் அண்ணன் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தி வணங்குகிறோம். என்றும் தலைவர் வழியில் வழக்கறிஞர் ஜோயல் மாநில இளைஞரணி துணை செயலாளர் என்று அச்சிடப்பட்டு உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடிக்கு இல்லம் தோறும் இளைஞரணி என்ற உறுப்பினர் சேர்க்கும் முகாமினை துவக்கி வைப்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் வாகைக்குளம் விமானநிலையம் வந்த அவருக்கு மாநில இளைஞரணி துணை செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் தலைமையில், இரண்டாயிரத்திற்க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாளை தமிழகம் முழுவதும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் மீண்டும் தூத்துக்குடி மாநகரம் முழுவதும் உள்ள 200 பயணிகள் செல்லும் ஆட்டோக்களின் மேல் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் ஸ்டிக்கர் ஒட்டி தென் மாவட்டங்களில் கொடி கட்டி பறக்க தொடங்கிவிட்டார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மாநில இளைஞரணி துணை செயலாளர் வழக்கறிஞர் ஜோயல், இந்த செயல் வரும் காலங்களில் இளைஞர்களுக்கு அரசியல் ஆசானாக வர வாய்ப்புள்ளது என்றும் பேசப்பட்டு வருகிறது. இதனால் தென் மாவட்ட இளைஞர்கள் மத்தியில் இது ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது.
இந்த செயல்பாடுகள் அனைத்துமே வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஜோயல் களம் காண வாய்ப்புள்ளதாகவே அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.