தூத்துக்குடி, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் உலக நீரிழிவு நோய் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தமிழ் சாலை ரோட்டில் உள்ள இம்மருத்துவமனையில் இருந்து செவிலியர் கல்லுரி மாணவிகள் விழிப்புணர்வு மேற்கொண்டனர்.
இவ்விழாவில், சிறப்பு அழைப்பாளர் காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அகர்வால் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் பெர்னார்டு ஆல்பர்ட் ராஜ்குமார், டாக்டர் சக்திவேல், டாக்டர் அஜய் சந்தோஷ் டேவிட், ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில், புனித அன்னை தெரசா செவிலியர் கல்லுரி மாணவியர் மற்றும் மருத்துவமனை ஊழியர் அனைவரும் விழிப்புடன் கலந்து கொண்டனர்