Thupparithal
செய்திகள்

ராவ் பகதூர் குருஸ் பர்னாந்துக்கு மணி மண்டபம்-தூத்துக்குடி மாநகராட்சி அவசரக் கூட்டத்தில் தீர்மானம்!.

தமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி, ராவ் பகதுார் குரூஸ் பர்னாந்த்க்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, நினைவு மண்டபம் அமைப்பதற்கு உரிய இடத்தினை தேர்வு செய்து பொதுபணித்துறைக்கு நில ஒதுக்கீடு செய்து தருமாறு கோரப்பட்டது.

மேற்படி கடிதத்தின் அடிப்படையில், தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட தெற்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ரோச் பூங்காவில் 20 சென்ட் இடத்தினை ராவ் பகதுார் குரூஸ் பர்னாந்துக்கு நினைவு மண்டபம் அமைப்பதற்கு தூத்துக்குடி மாமன்றத்தின் (24.01.2022) ம் தேதி துாத்துக்குடி அலுவலகத்திற்கு நில ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்குவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழியாக அரசுக்கு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை மூலம் மாநகராட்சியால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 20 சென்ட் நிலத்தில் ராவ் பகதுார் குரூஸ் பர்னாந்துக்கு மணி மண்டபம் அமைத்திட அனுமதி வழங்கப்பட்டது.

மேற்படி அரசாணையில் தெரிவிக்கப்பட்ட இடத்தில் மணி மண்டபம் அமைத்திட பொது மக்கள் ஆட்சேபனை தெரிவித்ததின்பேரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ் முன்னிலையில் சம்பந்தப்பட்ட சமுதாய மக்கள் பிரதிநிதிகளிடையே சமாதானப் பேச்சு வார்த்தை நடைபெற்றதில் துாத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அறிவுரையின் பேரில், தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பராமரிப்பிலுள்ள எம்.ஜி.ஆர் பூங்காவின் கிழக்கு பகுதியில் 21 சென்ட் பரப்பளவு உள்ள இடத்தில் ராவ் பகதுார் குரூஸ் பர்னாந்துக்கு மணி மண்டபம் அமைக்க முடிவு செய்யப்பட்டதாகவும், எனவே மேற்படி இடத்தில் மணி மண்டபம் மற்றும் சிலை அமைப்பதற்கு மாநகராட்சியில் தீர்மானம் இயற்றி தருமாறு, மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தற்போது நடைபெற்றுள்ள சமாதானப் பேச்சு வார்த்தையின் முடிவின் அடிப்படையில், தமிழ் சாலை மற்றும் ஜின் பாக்டரி சாலை சந்திப்பில் அமைந்துள்ள குரூஸ் பர்னாந்த் சிலை தொடர்ந்து பராமரிக்கப்படும் என்றும் துாத்துக்குடி மாநகராட்சி மையப்பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் பூங்காவின் கிழக்கு பகுதியில் 21 சென்ட் நிலப்பரப்பில் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்துக்கு மணி மண்டபம் அமைக்க நில ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கவும், அரசின் அனுமதி பெறுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வாயிலாக அரசுக்கு முன்மொழியும், மாமன்றத்தில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யவும், மாமன்றத்தில் அனுமதி வேண்டப்பட்டது.

இதனை தொடர்ந்து, இன்று மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், நடைபெற்ற கூட்டத்தில், தூத்துக்குடி மைய பகுதி எம்ஜிஆர் பூங்காவில் ராவ் பகதூர் குருஸ் பர்னாந்துக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, மற்றும் கம்யூனிஸ்ட், கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் தங்களது ஆதரவை தெரிவித்தனர். அதுமட்டுமல்லாது, முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாரு ஸ்ரீ ஆகியோருக்கு தங்களது நன்றியை தெரிவித்து. இந்த தீர்மானத்துக்கு அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் தங்களது ஆதரவை தெரிவித்துக் கொண்டனர்.

கூட்டத்தில், மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல் ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார், நகர் மன்ற குழு தலைவர் ராமகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர் ரங்கசாமி, இசக்கி ராஜா பொன்னப்பன், தெய்வேந்திரன், கந்தசாமி உட்பட மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அதிகாரிகள், மற்றும் அலுவலக பணியாளர்கள், என பலர் கலந்து கொண்டனர்.

Related posts

அமைச்சர், மாவட்ட ஆட்சியர், எம்பி, மேயர் ஆகியோருக்கு தபால் மூலம் தூத்துக்குடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் மற்றும் தீபாவளி நல்வாழ்த்துகள் கூறிய பள்ளி மாணவ, மாணவியர்கள்

Admin

தூத்துக்குடியில், திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் இந்தி திணிப்பை எதிர்ப்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!

Admin

தூத்துக்குடி, சிலுவைப்பட்டியில் நீர், மோர் பந்தலை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் திறந்து வைத்தார்.

Admin

Leave a Comment

error: Content is protected !!