தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினா் கனிமொழி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், சமூக நலத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பொியசாமி, ஆகியோருக்கு விவிடி நினைவு ஆரம்ப பள்ளி தலைமையாசிாியா் ஜெயவேணி தலைமையில் 2ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் தபால் அட்டையில் நம்ம தூத்துக்குடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள், அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்களை அனுப்பினாா்கள்.
இந்த ஏற்பாட்டினை, தூத்துக்குடி மாவட்ட காமராஜா் நற்பணி மன்றம் மற்றும் ஆரோக்கியபுரம் காமராஜா் நடமாடும் நூலகம் சாா்பில் தலைவா் லாரன்ஸ், செயலாளா் வழக்கறிஞா் சிலுவை, பொருளாளா் ஆஸ்வால்ட், அமைப்பாளா் ரவி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.