Thupparithal
செய்திகள்

பதிவு செய்யாமல் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் நடவடிக்கை; அரசு எச்சரிக்கை!.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாமல் பணிக்கு அமர்த்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் பீடி நிறுவனங்களில் மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.

இந்த தொழிலாளர்களை பணியமர்த்தும் போது, அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை எந்தவித விடுதலும் இன்றி தொழிலாளர் துறையின் labour.tn.gov.in/ism என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

இதுதொடர்பாக சங்க பொறுப்பாளர்கள், பிரதிநிதிகள், உணவு நிறுவன உரிமையாளர்கள், பிரதிநிதிகளுக்கான விளக்க கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது. கூட்டத்துக்கு தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் தலைமை தாங்கி இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கி கூறினார்.

மேலும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை உரியவாறு பதிவேற்றம் செய்யாமல் புலம் பெயர் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது ஆய்வில் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பதிவேற்றம் செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளரிடமோ அல்லது தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண்ணிலோ (0461-2340443) தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

மாற்றுத்திறனாளிகளின் மாற்றத்திற்கான கலைவிழா; மார்கண்டேயன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

Admin

கழுத்தில் காய்கறி மாலை, கையில் சிம்னி விளக்கு அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!.

Admin

கடந்த வருடத்தில் குற்றாலத்தில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றிய நிஜ ஹீரோவுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் கார் டிரைவராக பணி!.

Admin

Leave a Comment

error: Content is protected !!