தூத்துக்குடி, குலசேகரன்பட்டினம் மெயின் ரோட்டில் உள்ளது தருவைகுளம். இக்குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாயில் மரம் ஒன்று விழுந்து கிடந்தது. இதை பார்த்த விவசாயிகள் பலர் ஒன்று சேர்ந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி கால்வாயை சுத்தம் செய்தனர்.
இதுபற்றி விவசாயி ஒருவர் கூறுகையில், “சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதனை தெரிவித்து, அவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு மரங்களை அப்புறப்படுத்துவதற்கு காலதாமதம் ஆகிவிடும்.
இதனால் கால்வாயில் வரும் தண்ணீர் வீணாகி விடும் என்பதால் கால்வாயில் கிடந்த மரத்தை நாங்களே வெட்டி அப்புறப்படுத்தினோம்” என்றார்.