Thupparithal
செய்திகள்

கோவில்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 19.50 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளை எம்எல்ஏ கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாண்டரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5.50 லட்சம் மதிப்பிலான பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியையும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 14. லட்சம் மதிப்பிலான புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

மேலும் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் விஜய பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன்,ஒன்றிய செயலாளர் அன்பு ராஜ்,நகர துணைச் செயலாளர் மாதவராஜ், நகரப் பொருளாளர் ஆரோக்கியராஜ், நகர மன்ற உறுப்பினர்கள்,வள்ளியம்மாள் மாரியப்பன்,செண்பக மூர்த்தி,மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் அம்பிகா வேலுமணி,ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராமர்,அம்மா நகர பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன், விவசாய அணி ஒன்றிய செயலாளர் விஜயகுமார்,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் அப்பாசாமி,பழனி குமார்,முருகன், அல்லித்துரை, கோபி,ஜெயசிங், பழனி முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Related posts

பிப்.23ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்!

Admin

தூத்துக்குடி, ஒட்டப்பிடாரத்தில் பகுதியில் வெள்ளை காகம் தென்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியது.

Admin

கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட்டில் வாடகை பாக்கி கொடுக்காத சில கடைகளுக்கு சீல்; எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மார்க்கெட் முன்பு போராட்டம்!.

Admin

Leave a Comment

error: Content is protected !!