Thupparithal
செய்திகள்

கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட்டில் வாடகை பாக்கி கொடுக்காத சில கடைகளுக்கு சீல்; எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மார்க்கெட் முன்பு போராட்டம்!.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமாக மார்க்கெட் பகுதில் முத்துராமலிங்கத் தேவர் தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது.

இக்கடைகளில் ஒரு சில கடைகள் வாடகை பாக்கி இருந்து வந்த நிலையில் தொடர்ந்து பலமுறை வாடகை கட்ட வலியுறுத்தியும் கட்டாதால் இன்று அங்கு சென்ற நகராட்சி அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர். இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மார்க்கெட் முன்பு உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் சீல் வைக்கப்பட்ட கடைகள் திறக்கப்படும் என கூறியதை தொடர்ந்து அனைவரும் கலந்து சென்றனர்.

இது குறித்து வியாபாரிகள் தங்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கவில்லை என குற்றம் சாட்டினர்.

அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைத்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related posts

வியாபாரிகள் சங்க 11வது ஆண்டு விழா; தொழில்கடன், கூட்டுறவு கடன் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் வழங்கினார்.

Admin

வாக்குப்பதிவு மையத்தில் அதிமுக வேட்பாளரின் முகம் மற்றும் சின்னம் அடங்கிய மாதிரி வாக்குப்பதிவு அட்டவணை; கையும், களவுமாக பிடித்த மேயர் ஜெகன்…!

Admin

கோவில்பட்டியில் விஸ்வத் டிரேடர்ஸ் கடை திறப்பு விழா; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.

Admin

Leave a Comment

error: Content is protected !!