கயத்தாறு அய்யனார்ஊத்து அரசு உயர்நிலை பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு, போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மக்கள் சேவை இளைஞர் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ சாய்லிங்கா அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் இளங்கோ தலைமையேற்றார். மாணவன் பைசல் வரவேற்புரை ஆற்றினார் அறக்கட்டளை தலைவர் உமையலிங்கம் சிறப்புரை ஆற்றினார் குழந்தைகள் நல ஆலோசகர் சுரேத்துவாணி வாழ்த்துரை வழங்கினார்.
மேலும், குழந்தை பாதுகாப்பு, நலன் தொடர்பான போட்டிகள் நடைபெற்றது
நிகழ்ச்சியில் 250 மாணவ மாணவியர் பங்கேற்றனர். அறக்கட்டளையின் சார்பில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியாக, பள்ளி உதவி தலைமையாசிரியர் ராமலக்ஷ்மி நன்றி கூறினார்.