தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்ட விழா இன்று நடைபெற்றது. எட்டயபுரம் சாலையில் தேர் ஓடி வந்து கொண்டிருக்கும் போது அந்த நேரத்தில் பஸ் வேன் பைக் உள்ளிட்ட எல்லா வாகனங்களையும் போலீசார் அனுமதித்த காரணத்தினால் தேரோட்ட நிகழ்வில் இடையூறு ஏற்பட்டது.
கடந்த காலங்களில் எல்லாம் தேரோட்ட நிகழ்வின்போது போக்குவரத்து வேறு பாதைக்கு திருப்பி விடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அந்த நடைமுறை கடைபிடிக்கப்படாதது பக்தர்கள் பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
முன்கூட்டியே திட்டமிட்டு செய்ய வேண்டிய பணிகளை காவல்துறை செய்யாதது அல்லது கண்டு கொள்ளாதது ஏன் என்று தெரியவில்லை.
கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் இது போன்ற விஷயங்களில் கவனமும் செலுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் வேண்டுகோளாக உள்ளது.