தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட மீனாட்சி நகர் 6வது தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 13.69 லட்சம் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட வாறுகால் மற்றும் பேவர் பிளாக் சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆசூர் காளிபாண்டி, தமிழக விவசாய சங்க மாவட்ட செயலாளர் அருமைராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, அல்லித்துரை, பழனி குமார், பழனி முருகன், முருகன், கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.