திருநெல்வேலியிலிருந்து 1986ஆம் ஆண்டு அக்டோபர் 20-ம் நாள் தனி மாவட்டமாக தூத்துக்குடி உதயமாகியது. இதனை கொண்டாடும் விதமாக, தூத்துக்குடி, அரசு இசைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
இதனை மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் R. சரவணக்குமார் முன்னிலை வகித்து மரக்கன்றுகள் நட்டினார்.
இவ்விழாவில் 3 வது வார்டு உறுப்பினர் P. பாரதிராஜா, இசைப்பள்ளி தலைமை ஆசிரியை சிவகாமசெல்வி , அலுவலக பணியாளர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .
மேலும், தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியானது டி.சவேரியார்புரம் , சிலுவைப்பட்டி அஞ்சல், தூத்துக்குடி 2 என்ற முகவரியில் இயங்கி வருகிறது.
இப்பள்ளியில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது . இப்பள்ளியில் மாணவர்கள் சேர்ந்து பயன் பெறுமாறு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது . இதர விவரங்களுக்கு அலைபேசி எண் 9487739296 என்ற நம்பரை தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.