Thupparithal
செய்திகள்

உலக வளாி போட்டிக்கான தோ்வு தூத்துக்குடி தருவை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மருது வளாி பூமாரங் விளையாட்டு அமைப்பும், தேவராஜ் வஸ்தாவி சிலம்பாட்ட கழகமும் இணைந்து நடத்திய வளாி பயிற்சி முகாம் மற்றும் உலகவளாி போட்டி தேர்வுக்கான நிகழ்வு மாஸ்டா் காா்த்திக்ராஜா தலைமையில் தருவை மைதானத்தில் இன்று (25.06.20223) நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு, தொழிலதிபா் பொன்குமரன் மற்றும் சகா கலைக்குழு சங்கர், கராத்தே மாஸ்டா் பாட்ஷா, தூத்துக்குடி மாவட்ட மருது வளாி சங்க தலைவா் வசந்த் மற்றும் ஜான்மோசஸ் ஆகியோா் கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தனர்.

இதுகுறித்து மருது வளாி பூமாரங் விளையாட்டு அமைப்பு நிறுவனா் காா்த்திக்ராஜா கூறுகையில், வருகின்ற 2024 ஆம் ஆண்டு போா்ச்சுக்கல் நாட்டில் அல்பிகயுா்க்கியில் நடைபெறும் உலக வளாி போட்டிக்கு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தோ்வு நடைபெறுகிறது. அதன்படி, தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களுக்கான தோ்வு நடைபெற்றுவருவதாக தெரிவித்தார்.

நிகழ்விற்கான ஏற்பாடுகளை தேவராஜ் வஸ்தாவி சிலம்பாட்ட கழக நிறுவனா் அருள் அந்தோணி சிறப்பாக செய்திருந்தனர்.

Related posts

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ரூ.1 கோடியில் முன்மண்டபம் கட்டும் பணி தொடங்கியது.

Admin

கேபிள் டி.வி. தொழிலை பாதுகாத்திட கோரி சிபிஎம் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம்!

Admin

கோவில்பட்டி அருகே ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து அனுமதியின்றி நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் – போராட்டத்தில் ஈடுபட்ட வணிகர்களை போலீசார் கைது செய்தனர்.

Admin

Leave a Comment

error: Content is protected !!