மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 141 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் திரு உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் அய்யாதுரை பாண்டியன், நகரச் செயலாளர் விஜயபாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர்மன்ற உறுப்பினர் வள்ளியம்மாள் மாரியப்பன், ,வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர்,வழக்கறிஞர் சங்கர் கணேஷ், எம்ஜிஆர் அணி ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, முருகன், கோபி, பழனிகுமார், ஜெய்சிங், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.