தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், வேம்பார் கிராமத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் இந்து நாடார் உறவின்முறை பத்திரகாளியம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடம் சம்பந்தமாக இன்று (10.12.2022) அதன் நிர்வாக தலைவர் காசிராமன் தூத்துக்குடியில் பத்திரிகையாளரை சந்தித்தார்.
செய்தியாளர் சந்திப்பின் போது அவர் தெரிவித்ததாவது; கடந்த 34 வருடங்களாக நீதிமன்றங்களில் வழக்கை சந்தித்த வேம்பார் சுப்பிரமணியபுரம் இந்து நாடார் உறவின்முறை ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோவில் நிலங்கள் சுமார் 1 ஏக்கர் 9 செண்டு நிலங்களில் உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, அம்மன் கோயிலுக்கு சுற்று சுவர் எழுப்ப பட்டா ஆவணங்கள் வழங்கி பாதுகாப்பு வழங்க மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாங்கள் பாதுகாப்பு சம்பந்தமாக பலமுறை மாவட்ட அதிகாரிகளுககு மனு கொடுத்திருந்தோம். அவர்கள் எங்களுக்கு உரிய பாதுகாப்பு இதுவரை வழங்கவில்லை எனவே, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வரும் (13.12.2022) தேதி இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு சுற்று சுவர் பணி ஆரம்பிக்க இருக்கிறோம்.
எனவே தாமஸ் சிஎஸ்ஐ சர்ச் நிர்வாகத்தினர் கோவில் சுற்றுச் சுவர் கட்டுவதற்கு எங்களுக்கு எந்த இடையூறும் செய்யாத வகையில் அதற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தனர்.
செய்தியாளர் சந்திப்பின்போது கோயில் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.