Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி சிவன் கோவிலில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம்; மேயர் ஜெகன் பெரியசாமி நடத்தி வைத்தார்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அறநிலைத் துறை திருக்கோயில்களில் நடைபெறும் திருமணத்திற்கு ரூ.20,000 வழங்கி வந்த நிலையில் தமிழக அரசு புதிய அறிவிப்பாக ரூ.50,000 ஆக உயர்த்தியுள்ளது.

4 கிராம் தங்கம், கட்டில், பீரோ, பாய், மிக்ஸி, மெத்தை, தலையனை, குத்துவிளக்கு, எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் அடங்கிய தொகுப்புக்கள் வழங்குவதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் உடனுறை பாகம்பிரியாள் (சிவன் கோவில்) உள் கலையரங்கில் வைத்து சரவணக்குமார் – சிவலெட்சுமி, கருப்பசாமி பாண்டியன்-நிரஞ்சனா ஆகிய இரு ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை விதிமுறைகளின் ஹோமம் குண்டம் வளர்த்து கோவில் தலைமை அர்ச்சகர் கல்யாண சுந்தரம் என்ற செல்வம் பட்டர் தலைமையில் மந்திரங்கள் கூற மணமக்களுக்கு மாங்கல்யத்தை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். மங்கள வாத்தியம் மற்றும் கெட்டி மேளம் முழங்க இரு ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

இவ்விழாவில், கோவில் நிர்வாக செயல் அலுவலர் தமிழ்செல்வி, முன்னாள் கவுன்சிலர் கந்தசாமி, மாநகர திமுக மாணவரணி துணை அமைப்பாளர் சோமநாதன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் முப்பிடாதி, கோவில் நிர்வாகத்தை சேர்ந்த சாந்தி, கணக்கர் சுப்பையா, மற்றும் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி பிரபாகர் உள்பட மணமக்களின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து புதுமணத்தம்பதிகள் கூறுகையில்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் சிறப்பான திட்டங்களில் ஒன்றான இந்த இலவச திருமணம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் சேகர்பாபு வழிகாட்டுதலின்படி ஏழை-எளிய மற்றும் நடுத்தர இந்துக்களுக்கு மிக பெரிய வரபிரசாதமாக அமைந்துள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகளின் மூலம் தமிழகத்தில் புதிய எழுச்சியை இந்துக்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. தமிழக அரசின் சிறப்பான இந்த திட்டத்தை நாங்கள் மனதார வரவேற்கிறோம். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினர்.

Related posts

பிப்.23ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்!

Admin

டிச.31க்குள் தீப்பெட்டித் தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்; ஆட்சியா் தகவல்!.

Admin

ஆதிச்சநல்லூர், வஉசிதம்பரனார், வீரன் சுந்தரலிங்கனார்,வீரன் அழகு முத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் கல்வெட்டுகள் தூத்துக்குடி பூங்காவில்!.

Admin

Leave a Comment

error: Content is protected !!