Thupparithal
செய்திகள்

2022ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு; தூத்துக்குடியில் நடைபெற்று வரும் தேர்வு எழுதும் மையங்களுக்கு சென்னை ரயில்வே காவல்துறை துணைத் தலைவர் அபிஷேக் தீக்ஷித் நேரில் ஆய்வு.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 2022ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு இன்று (27.11.2022) தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி மெட்ரிகுலேசன் பள்ளி, கிரேஸ் பொறியியல் கல்லூரி, காமராஜ் கல்லூரி, புனித பிரான்ஸிஸ் சேவியர் மேல்நிலை பள்ளி, புனித தாமஸ் மேல்நிலை பள்ளி, வ.உ.சி கல்லூரி, காரப்பேட்டை நாடார் மேல்நிலைப் பள்ளி மற்றும் சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 8 தேர்வெழுதும் மையங்களில் நடைபெற்று வருகின்றது.

இத்தேர்வு எழுதும் மையங்களுக்கு இன்று (27.11.2022) சென்னை ரயில்வே காவல்துறை துணைத் தலைவர் அபிஷேக் தீக்ஷித் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்8 ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

Related posts

பாரதியாரின் 141 வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை.

Admin

வீட்டு வரி, மின்சார இணைப்பு வசதி தண்ணீர் வசதிகளை வழங்க கோரி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் வாயில் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்..

Admin

சமூகப் பொருப்புணர்வு திட்டத்தின் கீழ் என்.சி. ஜான்&சன்ஸ் நிறுவனம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்டம் வழங்கல்.

Admin

Leave a Comment

error: Content is protected !!