Thupparithal
செய்திகள்

தூத்துக்குடியுடன் திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தை இணைக்க எதிர்ப்பு: வாலிபர் தீக்குளிக்க முயற்சி.

திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தை தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலகத்துடன் இணைக்க உத்தரவிடப்பட்டது. இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்த நிலையில், நேற்று மாவட்ட கல்வி அலுவலகத்தை காலி செய்து அதில் உள்ள பொருட்களை தூத்துக்குடிக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் மாவட்ட கல்வி அலுவலக அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதற்காக 2 லாரிகளில் பொருட்களை கொண்டு செல்லும் பணி நடந்தது. இதனையறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலை செழியன் தலைமையில் அக்கட்சியினர் பொருட்கள் ஏற்றப்பட்ட லாரியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் திருச்செந்தூர் டிஎஸ்பி ஆவுடையப்பன், தாலுகா இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது 5 லிட்டா் பெட்ரோல் கேனுடன் வந்த மக்கள் நலன் காக்கும் இயக்கத்தின் திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் திருப்பதி, தீக்குளிக்கப் போவதாகக் கூறினாா். பெட்ரோல் கேனை போலீசார் பறித்தனா்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடு்பட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Related posts

கல்வி உதவித்தொகை உயர்வு; ஆட்சியர் தகவல்!

Admin

தூத்துக்குடி மாவட்டம் தனியாக உருவாக்கப்பட்டு 37வது ஆண்டு துவங்கியதை முன்னிட்டு அரசு இசைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

Admin

கேபிள் டி.வி. தொழிலை பாதுகாத்திட கோரி சிபிஎம் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம்!

Admin

Leave a Comment

error: Content is protected !!