Thupparithal
செய்திகள்

முன்னாள் ராணுவத்தினர் மாநில ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் முன்னாள் ராணுவ வீரர்கள் மாநில அளவிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் விடுதியில் வைத்து நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கத்தின் தலைவரும், பொது செயலாளருமான கேசவன், அமைப்புச் செயலாளர் ஜெயபிரகாஷ் நாராயணசாமி ஆகியோர் தலைமையில், திண்டுக்கல் மாவட்ட ராஜூ, திருப்பூர் மாவட்ட நிர்வாகி மாநிலத் துணைத் தலைவர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் வரவேற்றார்

இக்கூட்டத்தில், பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் திருப்பூரில் வைத்து நடத்துவதற்க்கு முடிவெடுக்கப்பட்டது.

திருப்பூரில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து மாவட்ட முன்னாள் படைவீரர்கள் தலைவர்கள் அனைத்து மாவட்ட இராணுவ வீரர்கள் பிரச்சினைகள் குறி்த்து ஆலோசனை செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.

இக்கூட்டத்தில், மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பரிசு; மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!

Admin

விளாத்திகுளம் அருகே பகுதி நேர நியாய விலை கடை; மார்க்கண்டேயன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

Admin

74வது குடியரசு தின விழா; தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு சார்பில் மூவர்ண கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Admin

Leave a Comment

error: Content is protected !!