Thupparithal
செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு!.

திருச்செந்தூர், சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று (12.10.2022) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின்கீழ் (Master Plan) திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

2021 – 2022 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது “திருக்கோயிலுக்குப் பெருமளவில் வருகைதரும் பக்தர்களுக்கான முழுமையான அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த 40 முதுநிலைத் திருக்கோயில்களுக்கான ஒருங்கிணைந்த பெருந்திட்டம் (Master Plan) வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது”. அதனை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 28.09.2022 அன்று திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்தார்கள்.

அதேபோல இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு ரூ.30 கோடி மதிப்பீட்டிலும், மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு ரூ.79 கோடி மதிப்பீட்டிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் , இன்று திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகள், ஒருங்கிணைந்த பெருந்திட்டப் பணிகள், பக்தர்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய வரிசைமுறை பணிகள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் குறித்து அமைச்சர் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி.சந்திரமோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் ந.திருமகள், சி.ஹரிப்ரியா, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் இரா.அருள்முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், வி.செந்தில்முருகன், ந. ராமதாஸ், இணை ஆணையர் (திருப்பணி) பொ.ஜெயராமன், சம்பந்தப்பட்ட திருக்கோயில்களின் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

தூத்துக்குடியில், வரும் 13-ந் தேதி மாநில அளவிலான சதுரங்க போட்டி தனியார் கல்லுரியில் நடைபெற இருக்கிறது.

Admin

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற வகையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பனை விதைகளை நட்டு வைத்தார்.

Admin

கருத்தடை அறுவை சிகிச்சையில் அலட்சியம்; தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!.

Admin

Leave a Comment

error: Content is protected !!