Thupparithal
ஆன்மிகம்

கோவில்பட்டி புற்று கோவிலில் ஸ்ரீ கோடி சக்தி விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி சிறப்புப் பூஜை – பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்புப் பூஜை நடைபெற்றது.

இதனையொட்டி இன்று காலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை,யாகசாலை பூஜை, கணபதி ஹோமம் , நவக்கிரக ஹோமம் நடைப்பெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ கோடி சக்தி விநாயகருக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். இவ்விழாவில், கோவில் தலைவர் ராஜபாண்டி பொருளாளர் சுப்பிரமணியன் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related posts

“அருள்மிகு” ஸ்ரீ மொட்டையசாமி திருக்கோயில் கொடைவிழா; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ சாமி தரிசனம்..!

Admin

அழுகிய முட்டை சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி? அமைச்சர் கீதாஜீவன் கூறிய பதில் என்ன??

Admin

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சுகாதார கேடு, ஆடி வரும் பக்தர்களுக்கு ஆனந்தத்தை தர வேண்டிய இடத்தில் இப்படி அசிங்கத்தை கொடுக்கலாமா அறநிலையத்துறை? விழித்துக்கொள்வாரா அமைச்சர் சேகர்பாபு?

Admin

Leave a Comment

error: Content is protected !!