தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கடலையூர் சாலை சண்முகா நகர் பகுதியில் அமைந்துள்ள “அருள்மிகு” ஸ்ரீ முத்துமாரியம்மன், “அருள்மிகு” ஸ்ரீ கருப்பசாமி திருக்கோயிலில் 30ம் ஆண்டு ஆடி மாதக் கொடை விழா நடைபெற்றது.
இவ்விழாவில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, ஒன்றிய கவுன்சிலர் ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், மகளிர் அணி பத்மாவதி, கோமதி, அதிமுக நிர்வாகிகள் வேல்ராஜ், விஜயகுமார், பழனிகுமார், பழனி முருகன், கடம்பூர் விஜி, கடம்பூர் மாயா துரை, கோபி, முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.