தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள முடுக்குமீண்டான்பட்டி கிராமத்த்தை சேர்ந்த ஆண், பெண் 100-க்கும் மேற்பட்ட திமுக கட்சி நிர்வாகிகள் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமையில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் மாபெரும் எழுச்சி மாநாடு ஆகஸ்ட் 20ல் மதுரையில் நடைபெற உள்ள நிலையில் -கோவில்பட்டியில் எழுச்சி மாநாடு பிரச்சார ஸ்டிக்காரை ஆட்டோகளில் ஒட்டி பிரச்சார பயணத்தை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர் அன்புராஜ், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, ஒன்றிய கவுன்சிலர் ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், மகளிர் அணி பத்மாவதி, கோமதி, அதிமுக நிர்வாகிகள் வேல்ராஜ், பழனிகுமார், பழனி முருகன், கடம்பூர் விஜி, கடம்பூர் மாயா துரை, கோபி, முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.