Thupparithal
அரசியல்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்களை நம்பாமல் தொண்டர்களை நம்பாமல் ஒரு கம்பெனி மூலம் தேர்தலை சந்தித்த ஒரே கட்சி திமுக தான் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு..

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ இல்லத்தில் வைத்து தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்களை நம்பாமல் தொண்டர்களை நம்பாமல் ஒரு கம்பெனி மூலம் தேர்தலை சந்தித்த ஒரே கட்சி திமுக தான் 2.5 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை தருவதாக கூறி தற்போது 1 கோடி பேருக்கு தான் அத்தொகையை வழங்க உள்ளதாக திமுக அரசு சொல்கிறது.. நிராகரிக்கப்பட்ட 1.5 கோடி பெண்களின் கோபத்திற்கு இனிமேல் தான் திமுக ஆளாகப் போகிறது.

தேர்தல் முடிந்த இரண்டு மாதங்களிலேயே கர்நாடகாவில் மாதம் 2000 ரூபாய் பெண்களுக்கு வழங்கப்பட்டது ஏன் தமிழகத்தில் வழங்கப்படவில்லை. 30 மாதங்கள் கழித்து வழங்கப்பட உள்ள மகளிர் உரிமை தொகை அப்படியென்றால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 30 ஆயிரம் ரூபாய் கடன் பட்டுள்ளது தற்போதைய அரசு அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்தி வரும் சோதனை.. சோதனை எல்லாம் கண்டு அதிமுக அஞ்சப்போவதில்லை.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.. திமுக ஆட்சியில் ரவுடிகள் சந்தோஷமாக உள்ளனர். டெல்லியில் அமித்ஷா எடப்பாடியார் சந்திப்பு நாடாளுமன்ற தேர்தல் குறித்து மட்டுமல்ல சட்டமன்றத் தேர்தல் குறித்தும் முடிவு எடுக்க உள்ளனர். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளனர். மைனர் மந்திரி சனாதானம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசி சர்சையில் அவரே சிக்கி கொண்டு உள்ளார்.. இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களே உதயநிதி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்..

உதயநிதி பேச்சால் வட மாநிலங்களில் தேர்தலின் போது பெரும் சரிவை சந்திக்கும் நிலை ஏற்படும் என இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் அச்சத்தில் உள்ளனர். திமுகவிற்கு அவரது கூட்டணியில் உள்ள தலைவர்களை எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாராளுமன்றத் தேர்தல் சட்டமன்றத் தேர்தலில் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவிலே அதிக உறுப்பினர்களைக் கொண்ட 3 பெரிய கட்சியாக அதிமுக இருந்து வருகிறது. இப்போது தேர்தல் வந்தாலும் திமுகவிற்கு எதிராக வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர். எனவே நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொண்டு மிகப்பெரிய வெற்றியை நாம் அடைய வேண்டும் என்றும் நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.

Related posts

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்; இளைஞரணி ராஜா சுரேஷ்குமார் சார்பாக மனவளர்ச்சி குன்றிய காப்பகத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

Admin

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 70ஆயிரம் மரக்கன்று நடும் பணியை அமைச்சர், எம்.பி, மேயர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Admin

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் தங்குவதற்கு உண்டான தடையை தமிழக அரசு உடனடியாக தகரக்க வேண்டும்- தமிழக முதல்வருக்கு சற்குரு சீனிவாச சித்தர் கோரிக்கை மனு!.

Admin

Leave a Comment

error: Content is protected !!