தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதல்வன் இளைஞரணி செயலாளர், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேற்றைய முன் தினம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனை முன்னிட்டு, திமுகவின் பொது குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலுவலகத்திற்கு நேரில் சென்று பொன்னாடை அளித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.