தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனும் இளைஞரணி செயலாளர், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான மார்கண்டேயன் ஆகியோர் அமைச்சர் உதயநிதியின் அலுவலகத்தில் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் பெரிய சாமியை நேரில் சந்தித்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பொன்னாடை போர்த்தி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.