திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவது என்று மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இதனையடுத்து, தருவைகுளம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு பகுதியில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதற்கு மாநகராட்சி மேயர் ஜெகன் தலைமை வகித்தார். ஆணையர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். மரக்கன்று நடும் திட்டத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
விழாவில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ, சண்முகையா, மாநகராட்சி துணை ஆணையர் குமார், மாநகர பொறியாளர் சரவணன், மாநகராட்சி உதவி பொறியாளர் பிரின்ஸ், அதிகாரிகள் சேகர், காந்திமதி, தனசிங், ராமசந்திரன். ரெங்கநாதன், ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகர், ஹரிகணேஷ், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், சரவணக்குமார், ரிக்டா, சுப்புலட்சுமி, நாகேஸ்வரி, இசக்கிராஜா, பவாணி மார்ஷல், ஜாக்குலின்ஜெயா, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், ஜெயசீலி, மகேஸ்வரி, ரெங்கசாமி, கனகராஜ்
காங்கிரஸ் கவுன்சிலர்கள்; எடின்டா, கற்பககனி, திமுக பகுதி செயலாளர் சிவகுமார், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட பிரதிநிதி செல்வக்குமார், மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர்மச்சாது, ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், அல்பட், மணி, ஜோஸ்பர், மகேஸ்வரசிங், டோளி, கன்னிமரியாள், கௌதம், லிங்கராஜா, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, மாநகர் மாவட்ட காங்கிரஸ் மண்டல தலைவர் சேகர், மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.