பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.. அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி தூத்துக்குடி 3–வது மைலில் உள்ள முத்துராமலிங்கதேவர் உருவச்சிலைக்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது..
நிகழ்ச்சியில், மாவட்ட பொதுச்செயலாளர் சத்தியசீலன், மாவட்ட துணைதலைவர்கள் சிவராமன், சுவைதார், வாரியார், மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், இளைஞரணி மாநில செயலாலர் பூபதி பாண்டியன், மாவட்ட செயலாளர் கணல் ஆறுமுகம், மேற்கு மண்டல தலைவர் சிவகணேசன், மாநில பொதுக்குழுஉறுப்பினர் இசக்கிமுத்து, மண்டல பொதுச்செயலாளர்கள் சொக்கலிங்கம், அசோக்குமார், சண்முகசுந்தரம், மேற்கு மண்டல சக்திகேந்திர பொருப்பாளர் லெட்சுமணன், சமூக வலைதள பிரிவு மாவட்ட தலைவர் காளிராஜா, துணைதலைவர் ஜெயக்குமார், கல்வியாளர் பிரிவு மாவட்டதலைவர் சின்னதங்கம், ஆன்மிக பிரிவு மாவட்டதலைவர் ஒம்பிரபு, விளையாட்டுபிரிவு சேர்மகுருமூர்த்தி, வெளிநாடுவாழ்பிரிவு மாவட்ட தலைவர் மணிகண்டன், இளைஞரணி மாவட்ட துணை தலைவர் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்..