தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நிறுவனத் தலைவர் பொன்னுச்சாமி தலைமையில் கடந்த 22.10.2023 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது… அப்போது கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்… அதில், மாநில தலைவராக ஒரு மனதாக பொன்னுச்சாமி, மாநில செயலாளராக பொன் மாரியப்பன், மாநில பொருளாளராக வெங்கடேசபெருமாள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்..
பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களின் ஆலோசனை படி, தூத்துக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரை மாநில துணை செயலாளராகவும், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராகவும் ஒரு மனதாக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்..
மேலும், இவர் தூத்துக்குடி மாவட்ட ஜெம் டிவி செய்தியாளரும், டூட்டி ரியல் நியூஸ் (யூடூப்) you tube ஆசிரியர் மற்றும் நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது..