Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி கோவில் அறங்காவலர்கள் நியமன ஆணையை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.

தூத்துக்குடியில் பிரசித்திப்பெற்ற தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், மேலூர் பத்திரகாளியம்மன் கோவில், சக்தி கணபதி கோவில், மட்டக்கடை உச்சிமாகாளியம்மன் கோவில் ஆகிய 4 கோவில்களுக்கு பொறுப்பு அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணையை டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் அறங்காவலர்களாக செல்வசித்ரா அறிவழகன், மகாராஜன், பாலகுருசாமி, மேலூர் பத்திரகாளியம்மன் கோவில் அறங்காலர்களாக கீதா செல்வமாரியப்பன், மகேஸ்வரன், மஞ்சுளா, சக்தி கணபதி கோவில் அறங்காவலராக இளங்குமரன், மட்டக்கடை உச்சிமாகாளியம்மன் கோவில் அறங்காவலராக இராமமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பார்த்திபன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் அருண் சுந்தர், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், வட்ட பிரதிநிதி பாஸ்கர், தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் நிர்வாக செயல்அலுவலர் சாந்தி தேவி, ஆய்வாளர் ருக்மணி மற்றும் கருணா, மணி, அற்புதராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related posts

ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு: ஆட்சியர் அழைப்பு!.

Admin

நவ (14) சர்க்கரை நோய் தினம்; தூத்துக்குடியில் தனியார் மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

Admin

நாடார் மகாஜன சங்க தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் மாலைசூடி அற்புதராஜ் தலைமை நடைபெற்றது.

Admin

Leave a Comment

error: Content is protected !!