உலக தரம், சர்க்கரை நோய் தினம் நவம்பர் (14) இன்று அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி பாரதி லயன்ஸ் சங்கம், தூத்துக்குடி சென்ட்ரல் லயன்ஸ் சங்கம், மற்றும் எஸ்ஆர்ஆர்ஏ மருத்துவமனை இணைந்து கடற்கரை சாலையில் உள்ள ரோச் பூங்காவில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமில், சர்க்கரை நோய் விழிப்புணர்வு, சர்க்கரை நோய் கண்டறிதல், சர்க்கரை நோய் மருத்துவ முகாம் நடைபெற்றது.
பின்னர், எஸ்ஆர்ஆர்ஏ மருத்துவமனை டாக்டர் செல்வராஜ் கூறுகையில், அனைவரும் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். புகையிலை பொருட்கள் மற்றும் மதுபானம் ஆகியவை குறைத்து கொள்ள வேண்டும். 3மாதத்திற்கு ஒரு முறை நல்ல டாக்டரை அணுக வேண்டும். மைதாவில் செய்யக்கூடிய பரோட்டாவை குறைத்துக் கொண்டு நன்றாக வாழ வேண்டும் என கூறினார்.