சட்ட மாமேதை அம்பேத்கரின் 66 வது நினைவு தினம் நாடு முழுவதும் அவரது அனுசரிக்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடியில் புதியதமிழகம்கட்சி சார்பில் அம்பேத்கரின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தலைமையில், தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் முன்பு அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.