Thupparithal
செய்திகள்

திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பரிசு; மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,330 திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.10ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது; தமிழ் வளர்ச்சித் துறையில் ஆண்டுதோறும் 1,330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ரூ.10ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் திறனறிக் குழு உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டு பரிசுக்குப் பரிந்துரை செய்யப்படுவர்.

மாணவர்கள் 1,330 குறள்களையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருப்பதோடு குறளின் பொருளையும் அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும். ஏற்கனவே பரிசு பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது.

விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தமிழ்வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பப் படிவத்தினை நிறைவு செய்து, தாங்கள் பயிலும் பள்ளி / கல்லூரியிலிருந்து உரிய அனுமதிச் சான்றிதழ் பெற்று, 3 புகைப்படங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்திற்கு 20.12.2022க்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கோவில்பட்டியில் விஸ்வத் டிரேடர்ஸ் கடை திறப்பு விழா; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.

Admin

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தனியார் நிறுவனத்திற்கு கட்டிட வேலை சம்பந்தமாக ஒரு கோடியே 92 லட்சம் ரூபாய் தர வேண்டும்; தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவரால் பரபரப்பு!.

Admin

தூத்துக்குடி அரசு மருத்துவமனையின புதிய முதல்வர் நியமனம்!

Admin

Leave a Comment

error: Content is protected !!