Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் சீர்கேடு பொங்கிய கம்யூனிஸ்ட் இயக்கமான ஜனநாயக மாதர் சங்கத்தினர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சீர்கேட்டை கண்டு பொங்கிய கம்யூனிஸ்ட் கோட்டு இயக்கமான ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்ட நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டு இயக்கமான அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட குழுவினர் மாவட்ட தலைவர் கலைச்செல்வி செயலாளர் பூமயில் தலைமையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநகர், புறநகர் திருச்செந்தூர், கோவில்பட்டி ஒன்றியம், உடன்குடி, ஸ்ரீவைகுண்டம், கருங்குளம் என அனைத்து இடங்களிலும் உள்ள அரசு மருத்துவமனையில் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் கடந்த இரண்டு வாரங்களாக உள்ள பல்வேறு வசதிகள் குறித்து குழுவாக ஆய்வு செய்துள்ளனர்.

அந்த ஆய்வில் மருத்துவமனையில் பொது மக்களுக்கு தேவையான பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லை என்பதை கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட அலுவலகத்தில் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது… தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு இருக்கின்றோம். தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, முத்தையாபுரம், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம்,கருங்குளம், கோவில்பட்டி ஒன்றியம் இந்த பகுதிகளில் நாங்கள் எடுத்து ஆய்வின் அடிப்படையில் பல்வேறு கோரிக்கைகள் எங்களுடைய கவனத்திற்கு வந்திருக்கின்றது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கக்கூடிய அரசு வாங்கி வைக்கக்கூடிய எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி இல்லை. மும்பையில் இருக்கக்கூடிய தனியார் நிறுவனமான கிருஷ்ணா என்கின்ற நிறுவனம் 3 கோடி ரூபாய்க்கு ஸ்கேன் வாங்கி அங்கு வைத்திருக்கிறார்கள். இதே அரசு சார்பாக வாங்கி வைத்தால் ஏழை எளிய மக்கள் அங்கு இலவசமாக ஸ்கேன் எடுப்பதற்கு உதவியாக இருக்கும். அதேபோல எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதற்கு அரசு மருத்துவமனையில் 2000 ரூபாய் செலவாகிறது.

இதே தனியார் மருத்துவமனையில் 6,000 ரூபாய் செலவாகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதேபோல இரண்டு பெண் குழந்தைகள் திட்டம் அதன் மூலம் கிடைக்கக்கூடிய அந்த சலுகை என்பது குறித்த நேரத்தில் கிடைப்பது இல்லை.

ஆம்புலன்ஸ்கான ஓட்டுநர் பணி 15 வருடமாக காலியாக இருக்கிறது. அதேபோல் ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து சேர்வதில்லை. ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழ் சரியாக கிடைப்பதில்லை. பிரசவ நேரத்தில் மின்சாரம் இல்லை என்று சொன்னால் ஜெனரேட்டர் வசதி கிடையாது.

பல இடங்களில் 108 ஆம்புலன்ஸ் வசதி இல்லை..ஆரம்ப சுகாதார நிலையத்தில் வீல் சேர், கர்ப்பிணி பெண்களுக்கு அரசு திட்டத்தின் கீழ் கொடுக்கக்கூடிய மகப்பேறு உதவி தொகை கிடைப்பது இல்லை.

காயல்பட்டினம் அரசு மருத்துவமனை கதவு உடைந்து எந்த பாதுகாப்பும் இல்லாத நிலைமை இருக்கிறது. அதேபோல் இரவு நேர காவலர்கள் அரசு மருத்துவமனைகளில் இல்லை. அங்கே இருக்கக்கூடிய மருத்துவர், நோயாளிகளுக்கும் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாத நிலைமை அரசு மருத்துவமனைகளில் உள்ளது. இருக்கு அதே போல மருத்துவ பணியாளர்கள் சுகாதார பணியாளர் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

ஆகவே, மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு கொடுக்க இருக்கிறோம். இந்த மனுவுக்கு சரியான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொடர்ந்து போராட்டங்களை நாங்கள் நடத்த இருக்கின்றோம் என்றார்.

பேடியின் போது, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட துணை தலைவர் கமலா, மாநில குழு உறுப்பினர் இனிதா, மாநகர தலைவர் முத்துமாரி ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

முன்னாள் ராணுவத்தினர் மாநில ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

Admin

கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் மூலம் பொது மருத்துவ முகாம்- மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்

Admin

உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினம்; ஒருங்கிணைப்பாளர் டைகர் வினோத் தலைமையில், 500 கி.மீ தூரம் புறா பந்தயம்!.

Admin

Leave a Comment

error: Content is protected !!