புவி நாள் என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.
இத்தினத்தை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள ஹெரிடேஜ் பூங்காவில் வெப்பமயம் தடுக்கும் வகையில் பல்வேறு மரக்கன்றுகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நட்டினார்.
பின்னர் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும் அதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில்; மாநகராட்சி ஆணையர் திணேஷ்குமார், மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் சுமதி, உதவி ஆணையர் சேகர், மாநகராட்சி கவுன்சிலர்கள் இசக்கிராஜா, பொன்னப்பன், ஜான், காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரபோஸ், சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியராஜ், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் உள்பட பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் சுகாதார பணியாளர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்; பூமி வெப்பமயமாவதை தடுக்கும் விதமாக பூமி தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஏற்கனவே பசுமையான நிலையை உருவாக்க மாசில்லா மாநகரை அழகுப்படுத்தும் வகையில் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த பூங்கா தேசிய நெடுஞ்சாலையில் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட எல்லையின் கடைசி பகுதியில் அமைந்துள்ளது. இப்பூங்காவை இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த பூங்காவின் சிறப்பு அம்சங்களாக எதிர்கால தலைமுறையினருக்கு தெரியும் வகையில் 10 கல்வெட்டுகள் அமைக்கப்பட்டு அதில் ஆதிச்சநல்லூர், வாஞ்சிநாதன், வீரன்அழகு முத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், சுப்பிரமணியபாரதியார், வஉசிதம்பரனார், வீரன் சுந்தரலிங்கனார், வெள்ளையதேவன், கொற்கை துறைமுகம், கழுகுமலை குகைகோவில், இதன் படங்கள் அதில் பொறிக்கப்பட்டு நம்நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த தலைவர்களையும் போராடியவர்களையும் மக்களுக்கு தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு அம்சமாகும் என்றார்.