Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம்; சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் மயக்கத்தில் இருந்தும் விடாமல் கைது செய்த போலீசார்!.

தூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக மே-4-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இருக்கும் நிலையில் ஜிப்சம் அகற்றம், ஆலை பராமரிப்பு என்ற பெயரில் ஆலையினை திறக்க வேண்டும் என்று ஆலை நிர்வாகம் அனுமதி கோரி இருக்கின்றது. அதற்கான அனுமதியை உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கின்றது. இதற்கு தமிழக அரசு தரப்பில் அனுமதி அளிக்க கூடாது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு பண்டாரம்பட்டி கிராம பகுதி பெண்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மதிமுக-வினர், மக்கள் அதிகாரம் அமைப்பினர் என 100-க்கும் மேற்பட்டோர் மனுகொடுக்கும் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏடிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் 3அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து ஆட்சியர் செந்தில் ராஜ்-யை சந்தித்து மனு அளிக்க அனைவரும் ஆட்சியர் அலுவலகத்திற்குள் உள்ளே நுழைய முற்பட்டனர். அப்போது காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போராட்ட குழுவினர் திடீரென சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடத்திற்கு மேலாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், போலீசார் போராட்ட குழு பெண்களை காவல்துறை வாகனத்தில் ஏற்ற முற்பட்டனர். அப்போது சில பெண்கள் மயக்கமுற்றனர். இருந்தும் போலீசார் அவர்களை குண்டுகட்டாக காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

மேலும், இந்த போராட்ட குழுவினரில் உள்ள ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தனர். அப்போது அந்த பெண்ணின் சகோதரி அந்த பெண்ணை “போகாதே வா” “போகாதே வா” என கதறி அழுதார் இருந்தும் போலீசார் அந்த பெண்ணை அவருடன் போக சொல்லி கூறினர். இருந்தும் நான் போராட்ட களத்தில் தான் நிற்பேன் என கூறி அந்த பெண் காவல் துறை வாகனத்தில் ஏறினார்.

இது குறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பைச் சேர்ந்த ஹரிராகவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கும் போது வேதாந்த நிறுவனம் பராமரிப்பு என்ற பெயரில் சிப்ஸம் எடுக்க வேண்டும் என்ற பெயரில் மீண்டும் ஆலையில் நுழைவதற்கு முயற்சி எடுக்கிறது. மே 4ம் தேதி ஆலை திறக்க வேண்டும் என்பது சம்பந்தமாக தமிழக அரசு அந்த வாதத்தை உறுதியாக வைத்து வேதாந்த தாக்கல் செய்த இடைக்கால மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், விரைவாக இந்த ஆலையை மூடியது செல்லும் என்ற ஜீவோவை நம்பத் தகுந்ததாக மாற்றி தூத்துக்குடி மண்ணிலிருந்து வேதாந்தா நிறுவனம் அகற்றப்பட வேண்டும். என்றார்.

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு கூட்டமைப்பை சேர்ந்த வசத்தி கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு என்ற பெயரில் திறக்க போவதாக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வர உள்ளது என்று கூறுகின்றனர். இந்த ஆலை அகற்றப்பட வேண்டும். இந்த ஆலையை தற்போது பராமரிக்க என்ன தேவை இருக்கிறது. இது அரசு போடும் நாடகமாகும்.

ஆகவே, அரசு கவனத்திற்கு கொண்டுவந்து தமிழக அரசு இந்த ஆலையை பராமரிப்பதற்கு ஒருகாலும் அனுமதிக்க கூடாது. இந்த 15 உயிர்களை கொலை செய்த ஸ்டெர்லைட் ஆலை உடனடியாக தண்டனை கொடுக்க வேண்டும் அருணா ஜெகதீசன் விசாரணையில் சொன்னது படி கைது செய்ய வேண்டும். இந்த ஆலையை அப்புறப்படுத்த வேண்டும். பராமரிப்பு பணிகளுக்கு அரசு அனுமதிக்க கூடாது. விசாரணை கமிஷன் சொன்னப்படி குற்றவாளிகளை சட்டப்படி கைது செய்ய வேண்டும். தமிழக முதல்வர் உடனடியாக சிறப்பு சட்டம் இயற்றி அவர் சொன்ன வாக்குறுதிப்படி ஆலையை மூட வேண்டும். மேலும் இந்த வழக்கை விரைவுப்படுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

Related posts

டூவிபுரம் மேற்கு பகுதி இனி அண்ணாநகர் என மாநகராட்சி கூட்டத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

Admin

தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் மாநில துணை செயலாளராக தூத்துக்குடியை சேர்ந்த செய்தியாளர் மாரிமுத்து நியமனம்…!

Admin

74வது குடியரசு தின விழா; ஐஎன்டியுசி அலுவலகத்தில் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்!.

Admin

Leave a Comment

error: Content is protected !!