தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் தலைமையில், மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சுதாகரன் வரவேற்புரை வழங்க கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு 198 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கினார்.
நிகழ்ச்சியில், நகர் மன்ற உறுப்பினர்கள் ஜேஸ்மின் லூர்து மேரி, கனகராஜ்,உதவி உடற்கல்வி இயக்குனர் ஆனந்த பிரபாகரன், மாவட்ட திமுக சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் அமலி அந்தோணி பிரகாஷ் உட்பட ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக, ஆசிரியர் கணேஷ் நன்றி கூறினார்.