Thupparithal
செய்திகள்

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட தூத்துக்குடி-கோயம்புத்தூர் ரெயில் சேவையை மீண்டும் இயக்க வேண்டும்- காங்கிரஸ் மாவட்ட தலைவர் முரளிதரன் கடிதம்!.

மதுரை கோட்டம், மண்டல மேலாளருக்கு தூத்துக்குடி காங்கிரஸ் மாநகர தலைவர் முரளிதரன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது; தூத்துக்குடி-கோயம்புத்தூர் இணைப்பு இரயில் பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கொரோனா பரவல் கால கட்டத்தில் இந்த சேவை நிறுத்தப்பட்டது.

தற்போது கொரோனா பரவல் முற்றிலும் நீங்கிவிட்ட நிலையில், இந்த இரயில் சேவை தொடராமல் இருப்பதால் தூத்துக்குடி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

கல்லூரி மாணவ, மாணவியர்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே நிறுத்தப்பட்ட இந்த இரயில் சேவையை உடனே தொடங்கிட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

Related posts

கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 20 ஆவது வார்டு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Admin

பணியில் இருந்த போது இறந்த தந்தை; கருணை அடிப்படையில் மகனுக்கு பணி ஆணையை வழங்கிய சண்முகையா எம்எல்ஏ!.

Admin

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் சீர்கேடு பொங்கிய கம்யூனிஸ்ட் இயக்கமான ஜனநாயக மாதர் சங்கத்தினர்.

Admin

Leave a Comment

error: Content is protected !!