தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சட்ட மாமேதை அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அரசு மருத்துவமனை எதிரே உள்ள அம்பேத்காரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அம்பேத்காரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாநில எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் தேவேந்திரன், நகர செயலாளர் விஜய்பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், வண்டானம் நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன்,ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சிவபெருமாள், மாவட்ட அம்மா நகர பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, முருகன், கோபி, பழனிகுமார், ஜெய்சிங், குழந்தை ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.