Thupparithal
செய்திகள்

குரூப் 2 முதன்மைத் தேர்வுகான இலவச பயிற்சி; நாளை டிச.3ஆம் தேதி துவங்குகிறது.

தூத்துக்குடியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்விற்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது; தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-II (நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) 5,446 காலிப்பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு முதன்மைத்தேர்வு 25.02.2023 அன்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ளது.

முதன்மைத் தேர்வுகான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் நேரடி வகுப்புகளாக 03.12.2022 அன்று சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஆரம்ப வகுப்புகள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் கோரம்பள்ளத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இப்போட்டித்தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

எனவே, மேற்குறிப்பிட்டுள்ள போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ள நகலுடன் தங்களது ஆதார் எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு (0461 – 2340159) முன்பதிவு செய்து இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.

Related posts

கோவில்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 19.50 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளை எம்எல்ஏ கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

Admin

கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் தகவல்!.

Admin

தூத்துக்குடி மாநகரில் காமராஜர் சிலை அமைக்க அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

Admin

Leave a Comment

error: Content is protected !!