தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம்பகுதியில் RC ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வளாகத்தில் நேற்று முன் தினம் நாணயக் கண்காட்சி நடைபெற்றது.
இக்கண்காட்சியை, தருவைகுளம்
தூய மிக்கேல் அதிதூதர் ஆலய பங்குத்தந்தை S.வின்சென்ட் துவக்கிவைத்தார். நிகழ்ச்சியை நாணயவியல் ஆர்வலர்களான A.ஆமோஸ், மற்றும் A.அந்தோணி மிக்கேல் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
ஏராளமான மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பண்டைய பாரம்பரியத்தின் அடையாளமான நாணயங்கள், ரூபாய் நோட்டுக்களைக் கண்டு பயனடைந்தனர்.
வியப்பூட்டும் வகையிலான இந்த அரிய நாணயங்கள் பற்றிய நிகழ்ச்சியினை அமைப்பாளர்களிடம் கேட்ட போது, இது அவர்களது இருபதாண்டு உழைப்பின் பலன் என தெரிவித்தனர்.
மேலும், அனைத்து பள்ளி மாணவர்களும் பயனடையும் வகையில் இது போன்ற நிகழ்வை தொடர்ந்து நடத்த இருப்பதாகவும் தெரிவித்தனர்.