Thupparithal
அரசியல்

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடியில், வழக்கறிஞர் கனகராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகரில் இன்று மின்சார கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்க இருந்த நிலையில் அதிக வாகனங்களில் வந்ததால் மதுரை அருப்புக்கோட்டை நான்கு வழிச்சாலையில் உள்ள வளையங்குளம் டோல்கேட்டில் வைத்து கிருஷ்ணசாமி மற்றும் அவருடன் வந்த 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது சட்ட விதிகளுக்கு முரண்பாகவும், அதிக வாகனங்களில் சென்றதால் வழக்கு பதிவு செய்யப்பட்டு திருமங்கலம் டிஎஸ்பி வசந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இச்சம்பவம் கண்டித்து புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தலைமையில் கட்சியினர் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், மாநில மகளிர் அணி செயலாளர் சரஸ்வதி, மாநகர செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் செந்தூர்பாண்டியன், கொளத்தூர் பெருமாள், முருகன், மாநகர இளைஞரணி பாலமுருகன், மாரியப்பன், மற்றும் நிர்வாகிகள் ஈஸ்வரி, பஞ்சவர்ணம், மகாராஜன், உலக முத்து, சுப்பிரமணியன், உள்ளிட்ட புதிய தமிழர் கட்சியினர் நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related posts

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்; இளைஞரணி ராஜா சுரேஷ்குமார் சார்பாக மனவளர்ச்சி குன்றிய காப்பகத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

Admin

அதிமுகவின் 50 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் 51வது ஆண்டு தொடக்க விழா; தூத்துக்குடி, எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Admin

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மாபெரும் வெற்றி – பஞ். தலைவர் சரவணக்குமார் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

Admin

Leave a Comment

error: Content is protected !!