திமுக மாநில இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்ட மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் 39வது வார்டு திமுக இளைஞரணி சார்பில் ராஜா சுரேஷ்குமார் ஏற்பாட்டில், மாநகராட்சி சுகாதார குழு தலைவரும், மாநகர பகுதி செயலாளருமான 39 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் தலைமையில், மற்றும் கழக நிர்வாகிகள் முன்னிலையில் 39வது வார்டுக்குட்பட்ட தெப்பக்குளம் அருகில் அமைந்துள்ள உள்ள ட்ரூத்ஃபுல் மனவளர்ச்சி குன்றிய காப்பகத்தில் குழந்தைகளுடன் கொண்டாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், வட்ட அவைத்தலைவர், கணேசபாண்டியன், வட்டபிரதிநிதிகள் செல்வகுமார், பொன்ராஜ், விக்னேஷ், கார்த்தி, வட்டப் பொருளாளர் பாஸ்கர், இளங்கோ, பகுதி வர்த்தக அணி அமைப்பாளர் மைதீன் இளைஞர் அணி, பாபு, அய்யாச்சாமி, பாலா, மணி, இசக்கி முத்து, சூரியா, இசக்கி தனபால், அரவிந்த், அபிசேக், சந்துரு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.