Thupparithal
அரசியல்

தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்த நாள்; தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் அமைச்சர் கேக் வெட்டி கொண்டாட்டம்!.

திமுக மாநில இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணியின் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்டம் சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு பிறந்தநாள் கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு பட்டாசுகள் வெடித்தும் கேக் வெட்டியும் கொண்டாடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று பிறந்த 25 பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்அணுவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட கழக நிர்வாகி ராஜ் மோகன் செல்வின், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர திமுக இளைஞரணி துணை செயலாளர் சிவக்குமார் (எ) செல்வின், மண்டல தலைவர் வழக்கறிஞர் பாலகுருசாமி, நிர்மல் ராஜ் கலைச்செல்வி, நகரமைப்பு குழு தலைவரும், 45 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர் கந்தசாமி, விஜயலெக்ஷ்மி,மாநகர அணி அமைப்பாளர் பிரதீப், மருத்துவர் அணி அருண்குமார், தொண்டர் அணி அமைப்பாளர் முருக இசக்கி, மற்றும் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கோவில்பட்டி, அண்ணா பேருந்து நிலையத்திற்குள் இரவு நேரங்களில் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தாமாகவினர் காதில் பூ சுற்றி மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது.

Admin

அண்ணாமலையை பார்த்து நாங்கள் தான் சிரிக்க வேண்டி உள்ளது-முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறிய காரணம் என்ன?…

Admin

மக்களை ஏமாற்றும் திமுக-விற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு தமிழகத்தின் முதலமைச்சராக அண்ணாமலை வரவேண்டும்-தூத்துக்குடி, பாஜக மகளிரணியினர் ..!

Admin

Leave a Comment

error: Content is protected !!