Thupparithal
அரசியல்

அண்ணாமலையை பார்த்து நாங்கள் தான் சிரிக்க வேண்டி உள்ளது-முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறிய காரணம் என்ன?…

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்ற கூட்டத்தில் கோவில்பட்டி நகராட்சிகூட்பட்ட வள்ளுவர்நகர், பங்களா தெரு, கதிரேசன் கோவில் ரோடு, உள்ள 22 பூத்துக்கான முகவர்கள் தேர்தல் கலந்து கொண்டனர். நகர செயலாளர் விஜயபாண்டியன் தலைமையில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ முன்னிலையில் அனைத்திந்திய எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார்.

பின்னர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில்; எடப்பாடி பழனிச்சாமி பிரதமராக வர வாய்ப்பு உள்ளது என்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்துக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிரிப்பு தான் வருகிறது என்றார். அது தொடர்பான கேட்ட கேள்விக்கு? பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பக்குவம் இல்லை. தங்களது தலைவரை உயர்த்தி பேச வேண்டும் என்பதற்காக அந்த கருத்தினை அவர் கூறி இருக்கலாம். 2014 நாடாளுமன்ற தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறி தனித்து நின்றோம். 37 இடங்களில் வெற்றி பெற்றோம். 1990ல் சந்திரசேகர் மற்றும் 1998ல் வாஜ்பாய் ஆகியோர் பிரதமராக வர அதிமுக கொடுத்த ஆதரவு தான் காரணம்…இதற்கு அண்ணாமலைக்கு சிரிப்பு வரவில்லையா.. அன்றைக்கு அவர் இல்லை. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து அவருடைய கருத்து என்று கூறி சென்று இருக்கலாம். இதில் சிரிப்பதற்கு ஒன்றுமில்லை. அண்ணாமலையை பார்த்து தான் நாங்கள் சிரிக்க வேண்டி உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு நிலைப்பாடு எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு நிலைப்பாடு என்பது இவர்களின் வாடிக்கையாக உள்ளது.. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழிக்க கூடிய ரகசியம், தந்திரம், மந்திரம், சூட்சமம் எங்களுக்கு தெரியும் என்று திமுக தேர்தலின் போது கூறியது. ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தில் நீட் தேர்வை ஒழிப்போம் என்று திமுக கூறியது. ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்றாம் ஆண்டு நெருங்கும் நிலையில் நீட் தேர்வினை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துகின்றனர். இது எவ்வளவு பெரிய ஏமாற்று நாடகம். மக்களை ஏமாளிகளாக நினைத்து ஏமாற்றுகின்றனர். நீட் தேர்வு வேண்டாம் என்று அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவரப்பட்டது. அதே வேலையைத்தான் இன்று திமுக செய்கிறது. காலத்திற்கு ஏற்றார் போல் வேசத்தை மாற்றுகின்ற இயக்கம் திமுக.

நீட் தேர்வு விவகாரம் ஒன்றே திமுகவின் நிலைப்பாட்டை மக்களுக்கும், வெளி உலகிற்கு பறைசாற்றுகிறது. சசிகலா, ஒபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது அவர்களின் உரிமை யாரும் யாருடனும் கூட்டணி சேரலாம். நாங்கள் மக்களை நம்புகிறோம். அதிமுக தலைமையில் மிகப்பெரிய மெகா கூட்டணி அமையும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெரிவித்துள்ளார். சில கட்சிகளுடன் பேசி இருக்கலாம், கூட்டணி முடிவாகி இருக்கலாம். ஆனால் அதை தற்போது சொல்ல முடியாது. அதிமுக தலைமையில் அமையக்கூடிய மெகா கூட்டணி தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றார்..

Related posts

தூத்துக்குடி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சருக்கும், தூத்துக்குடி அதிமுக வேட்பாளருக்கும் இடையே பரபரப்பு..! இந்தா மைக்கை பிடி என வேட்பாளரிடம் மைக்கை கொடுத்துவிட்டு அமர்ந்த முன்னாள் அமைச்சர்; என்ன நடந்தது…!

Admin

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்; தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தனர்.

Admin

தமிழக முதல்வர் தூத்துக்குடி வருகை; அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!.

Admin

Leave a Comment

error: Content is protected !!