திமுக மாநில இளைஞரணி செயலாளரும், சென்னை சேப்பாக்கத்தின் சட்ட மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இளைஞரணி துணைச் செயலாளர் எஸ் ஜோயல் சார்பில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை, திருச்செந்தூர் மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரமும் தாய்மார்களுக்கு சேலையும் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி உதயநிதி ஸ்டாலின் மன்ற மாவட்ட செயலாளர் பால்துரை தலைமையில் பொருளாளர் சேக் முகமது , வழக்கறிஞர் ஜான் ஜோசப் , துணைத்தலைவர் நடராஜன் , திருச்செந்தூர் சுரேஷ் , மாநில மாவட்ட துணை பொருளாளர் பிரதீப் , மாநகர செயலாளர் ராஜா , விமல்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.