திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் 39வது வார்டு திமுக இளைஞரணி சார்பில் ராஜா சுரேஷ்குமார் ஏற்பாட்டில், மாநகராட்சி சுகாதார குழு தலைவரும் மாநகர பகுதி செயலாளருமான 39 வது மாமன்ற உறுப்பினருமான எஸ்.சுரேஷ்குமார் தலைமையில் மற்றும் கழக நிர்வாகிகள் முன்னிலையில் 39வது வார்டு பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
மேலும், தேரடி பகுதியில் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.
பின்னர், வட்ட துணை செயலாளர் மைதீன் ஏற்பாட்டில், வட்ட செயலாளர் கங்கா ராஜேஷ் முன்னிலையில் பகுதி செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் இளைஞர் அணியினர் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கினர்.
இந்நிகழ்வில், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், வட்ட அவைத்தலைவர் கணேச பாண்டியன், வட்டபிரதிநிதிகள் செல்வகுமார், பொன்ராஜ், விக்னேஷ் , கார்த்தி , வட்டப் பொருளாளர் பாஸ்கர், இளங்கோ, பகுதி வர்த்தக அணி அமைப்பாளர் மைதீன், இளைஞர் அணி,பாபு, அய்யாச்சாமி, பாலா, மணி, இசக்கி முத்து, சூரியா, இசக்கி தனபால், அரவிந்த், அபிசேக் , சந்துரு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.